இலுப்பை நெய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கரப்பான் அடருங் கடிசிரங்கு புண்ணும்
உரப்பாம் இடுப்புவலி ஓடும் - கரப்பானும்
பாகுமொழி மாதே பலமுண்டாந் துற்பலம்
ஏகும் இலுப்பையினெய்க் கே
- பதார்த்த குண சிந்தாமணி
இந்நெய்யால் கரப்பான், கடிவிடம், சிரங்கு, இடுப்புவலி, புண், வலிமை இவை உண்டாகும்; வாதம் நீங்கும்