ஆனைக்கா அப்பு

மோனை எதுகையில் முத்தமிழ்ப்பா
பாடிடுவேன்
மானை விரலேந்த மாதொரு
பாகனாய்
ஆனைக்கும் செஞ்சிலந்திக் கும்நல்
லருள்கூர்
ஆனைக்கா அப்புவிற் கே

---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (30-May-22, 8:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே