மருத மரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஓதமெனு நீரிழிவை யோட்டும் பிரமேகங்
காதமென வோடக் கடத்துங்காண் - போத
மயக்க மொடுதாக மாறாச் சுரத்தின்
தயக்கமறுக் கும்மருதஞ் சாற்று
- பதார்த்த குண சிந்தாமணி
நேரிசை வெண்பா
குட்டரோ கங்கிருமி கோர வயிற்றுவலி
துட்டவறட் சூலை தொலையுங்காண் - கிட்டிப்
பொருதம்பா மென்னு(ம்)விழிப் பூவையரே நாளும்
மருதம்பா ரென்றளவில் மாய்ந்து
- பதார்த்த குண சிந்தாமணி
இது வெகுமூத்திரம், பிரமேகம், மயக்கம், அதிகதாகம், ஆயாசம், மறாச்சுரம், பெருவியாதி, கிருமி நோய், வயிற்றுநோய், வறட்சூலை இவற்றைப் போக்கும்