மோதகவல்லி மரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பொங்கிவரு வள்ளைப் புனலினசிர்க் குங்காலா
லங்கியுந்த வீழுமிரத் தாமயநோய் - தங்கவே
போதகத் துச்சியெனப் பூரித்த மாமுலையாய்
மோதக பூரகத்தை முன்
- பதார்த்த குண சிந்தாமணி
இதனைப் பயன்படுத்தினால் இரத்தப்போக்கு, வாதத்தால் ஏற்பட்ட இரத்த சீதம் இவை நீங்கும்