வேப்ப நெய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாதம்போம் பித்தமிகு மாறாக்கி ரந்தியொடு
மோதுகரப் பான்சிரங்கு முன்னிசிவும் - ஓதுடலின்
நாப்ப ணுறுசுரமு நாடுசந்நி யுந்தொலையும்
வேப்பநெய் யென்றொருக்கால் விள்ளு
- பதார்த்த குண சிந்தாமணி
இது வாதம், கிரந்தி, கரப்பான், சிரங்கு, முன்னிசிவு, சுரம், சன்னி ஆகியவற்றை நீக்கும்; பித்தத்தை உண்டாக்கும்