மறவாதே
கெடுக்க வேபல கேடொடு நாடுடை
நச்சுக் கயவரு மஞ்சிட வென்றொரு
கிளறிய புயலது கிடுகிடு கிடுவென - வரவாகிக்
*
கிலிக்கு ளேஉயி ராவியு மேவிட
லுற்றுச் செயலினை இன்றிவ ரெண்ணுவ(ர்)
கிலியொடு திரிகிற நிலையொரு பதிலடி யெனவாமே
*
தடுக்க வேமுடி யாநிலை யாகிய
தற்குப் பலவுள தென்பதை நின்றெரி
தகதக தனலொடு கருகிய பிறகிவ ரறிவாரோ
*
திருட்டி னாலுய ரேசெல வேபல
திட்டத் துடனிழி வின்றுற வன்றொரு
திமிருட னுருவிய பணமொடு திரிவது நிசமாமே
*
வடுக்க ளாகிட வேமிகு தீயிடை
வைத்துக் கருகிட வென்றிவ ரன்றொரு
வதைவழி யெமதுயி ருறவுக
ளுருகிய தறிவாரோ
*
வலிக்கு மேயென வேயுண ராதவர்
வைத்துச் சிறுபொரி யின்றுண ரென்றிட
வலியுற விடுமிறை செயலிதை யொருமுறை நினைவாரே
*
அடுக்கி யேவிட ஆயிர மாகிய
அற்பத் தனமதை அன்றிவ ரின்படை
அகமிறு கியபடி அழிவெனு மிழிசெய லதனாலே
*
அரக்க னாயிவ னாகிய நாளது
அச்சத் தினைவிதை யென்றெம தன்னையர்
அடிவயி றெரிகிற வதைதனை மனமது மறவாதே