மத யானையின் பிடியில் சதிகாரனே மாட்டிக்கொள்ளும் நாள் வாராதா என்ன
மதம் என்னும் மத யானையை தூண்டி தூய உள்ளத்தை சிதைக்கும் சிற்றினமே
சாதியின் சதையை பற்றி கொண்டு சமநிலை சிதைக்கும் சிறியனே
அதிகார வெறியில் அரசு இயந்திரங்களை அலைகழிக்கும் சிறுமையே
யாவரும் சமம் ஏன்ற நிலை எய்த தடை செய்யும் தடைக்கல்லே
மத யானையின் பிடியில் சதிகாரனே மாட்டிக்கொள்ளும் நாள் வாராதா என்ன