கண்ணால் அழைப்பு
நேரிசை வெண்பா
காதல்நோய் தீர்கவரு வாயெனவார்த் தைவிடாள்
காதலி நோக்கால் அழைப்பளாம் -- ஆதரிப்பீர்
யென்றிரு கண்மயங்க யெய்வளாம் காதலம் பு
மென்மேல்பெண் மைக்கூட்ட வே
காதல் பெண்ணாள் தன்காதல் நோயைத் தீர்க்க வார்த்தையால்
அழைப்பது பெண்மை அல்ல ஆக அவள் காதல் நோயைத் தீர்க்க
தன்னுடைய காதலனை தன்னுடைய சொருகும் கண்ணால் அழைப்பை
விடுவளாம். இது அவளுடைய பெண்மைக்கு மேலும் பெண்மை கூட்டி
அவளின் மதிப்பை உயர்த்துமாம்.
காமத்துப்பா்ல். குறள். 10/ 20 வது பாடல்
...