நிர்மூலமாகுமா

கணவனும், மனைவியும்—மனக்
கசப்பால் நாளெல்லாம்
சண்டையிட்டுக் கொண்டால்
நரகமாகிப்போகாதோ ,
நிம்மதி தான் நிலைக்குமா ?
ஒத்துபோகாத இரு உயிர்கள்
ஒரே வீட்டில் ஒன்றாக
வாழத்தான் முடியுமா ?

உள்ளமும் ஒரு இல்லம் தான்
உறவுகளே ஒன்று பட்டு
உயிர் வாழ எண்ணாதபோது
எதிரும் , புதிருமான
நன்மையும் ,தீமையும் ஒன்றாக
நெஞ்சில் இருக்குமா ?—இல்லை
நொருங்கி சிதைந்து
நிர்மூலமாகுமா ?

எழுதியவர் : கோ. கணபதி. (3-Jun-22, 11:00 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 37

மேலே