மனிதம் இல்லாத மனிதர்கள் 3

நீர் நிலைகள் நிரம்புகிறது
வயல்களெங்கும் பச்சைநிறம்
நெற் களஞ்சியங்களும் நிரம்புகிறது
வியாபாரக் கூடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
பணப்பெட்டிகள் நிரம்புகிறது
ஆண்டவனின் உண்டியல் நிரம்பிகிறது
குடி கூத்து கும்மாளம் என கேளிக்கை விடுதிகள் நிரம்புகிறது
பிச்சை பாத்திரங்களும்
எத்தனையோ குழந்தைகளின்
வயிறும் நிரம்பாமலேயே
அயிரமாயிரம் பொழுதுகள் விடிந்துகொண்டே இருக்கிறது...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (4-Jun-22, 10:04 am)
பார்வை : 165

சிறந்த கவிதைகள்

மேலே