உன் புன்னகை முத்துக்களுடன் போட்டி
சிப்பியில் புதைந்து கிடந்த
முத்துக்களை
விடுதலை செய்து
மாலையாக்கி கழுத்தினில்
அணிந்ததாய்
பார்
இந்தச் சிப்பி முத்துக்கள்
உன் புன்னகை
முத்துக்களுடன்
போட்டி போடத் துவங்கிவிட்டன
முத்துக்களின் இந்த
அத்து மீறலை
எப்படி அனுமதிக்கிறாய் நீ ?