அஞ்சனம் பூசினள் அன்றலர் பெண்பாவை - வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
அஞ்சனம் பூசினள் அன்றலர் பெண்பாவை
நெஞ்சினில் நின்றிடும் நேர்கொண்ட பார்வையால்
அஞ்சுதல் நீக்கியே ஆக்கமாய் வாழ்பவள்;
சஞ்சலம் தீர்த்திடும் சக்தியாம் என்பேனே!
- வ.க.கன்னியப்பன்
எடுத்துக் காட்டு:
030 திருஅரதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்)
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
(’ய்’இடையின ஆசு)
பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி
மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை
நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 1
- திருஞானசம்பந்தர் தேவாரம் - மூன்றாம் திருமுறை