தேனின் நிகர்த்தவளாம் தென்றல் போல்வாளே - கலிவிருத்தம் – இன்னொரு வகை

(தேமா கருவிளங்காய் மா தேமாங்காய்)

கானின் மயிலனையாள் கற்ப கம்போன்றாள்
மானின் விழியிணையாள் மருளும் பெண்தானே
வான நிலவொளியில் வந்து நின்றாடும்
தேனின் நிகர்த்தவளாம் தென்றல் போல்வாளே!

குறிப்பு:

நான்கடிகளிலும் சீர் ஒழுங்கைக் கவனிக்க வேண்டும்!

முதல் சீர் - நான்கடிகளிலும் தேமா;
இரண்டாம் சீர் - நான்கடிகளிலும் கருவிளங்காய்;
மூன்றாம் சீர் - நான்கடிகளிலும் மா;
நான்காம் சீர் - நான்கடிகளிலும் தேமாங்காய்;

- வ.க.கன்னியப்பன்

எடுத்துக் காட்டு:

கலிவிருத்தம்
(தேமா புளிமாங்காய் மா மாங்காய்)

தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த வல்ல லடையாவே 2

- 083 திருஅம்பர்மாகாளம், முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்

நான்கடிகளிலும் சீர் ஒழுங்கைக் கவனிக்க வேண்டும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jun-22, 3:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே