அப்னா

பேரன் மனைவிக்கு
முதல் மகப்பேறில் பிறந்தது
அழகான பெண் குழந்தை
தேவதை போல் தோற்றம்!

பெயர் வைக்க வேண்டும்
தற்காலத் தமிழர் நாகரிகம் படி
இந்திப் பெயர் வைப்பதுவே
இன்று நிலவும் நடைமுறை.

பேரனையே இந்திப் பெயரொன்றைத்
தேர்வு செய்யப் சொன்னேன்
அவன் தேர்வு செய்தான்
'அப்னா' என்ற பெயரை.

மூன்று வயது ஆகிறது
அப்னாச் செல்வத்திற்கு
அண்டை வீட்டுக் குழந்தைகளோடு
அவள் விளையாடும் போது

தவறு செய்யும் குழந்தைகளை
அப்னாவிற்குப் பிடிக்காது
அப்பு அப்பி விடுவாள் கன்னத்தில்
கன்னம் இரண்டும் வீங்கிச் சிவந்து விடும்

ஏன்டா இந்தப் பெயரை வைத்தாய்
என் பேராக் பையா?
அப்னா தப்னா ஆகிறாளே தினம்
அவளுக்கு ஏன்டா இந்த கடுஞ்சினம்?

############################################
Apna = dream

எழுதியவர் : மலர் (9-Jun-22, 9:32 pm)
சேர்த்தது : மலர்1991
பார்வை : 28

சிறந்த கவிதைகள்

மேலே