பால் பா

அசைபோட் டசைபோட்டு தீனியுண்ணும் நற்பசுமாடு
அசைசீர் வழியே எழுதிநீ நற்கவிபாடு
அசைபோடும் மாடு பசும்பால் கறக்கும்
அசைசீர் வழிஎழுது நற்பா சுரக்கும்

----கலி விருத்தம்

அசைபோட் டசைபோட்டு நற்பசு உண்ணும்
அசைசீர் வழியேநீ நற்கவி பண்ணு
அசைபோடும் மாடு பசும்பால் கறக்கும்
அசைசீர் வழிசுரக்கும் பா

-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jun-22, 10:08 am)
பார்வை : 26

மேலே