தாயன்பு
தாய் அன்பு
கம்பனின் அறுசீர் ஆசிரிய விருத்தம்
கருவிளம். காய். காய். காய். மா. மா
படரெலாம் படைத்தாளைப் பழிவளர்க்குஞ் செவிலியைத்தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங்காலம் கிடந்தேற்கும் உயிர்ப்பாரம் குறைந்து தேய
உடரெலாம் உயிரிலா எனத்தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே
இடரிலா முகத்தாளை அறிந்திலையேல் இன்னின்றாள் என்னை ஈன்றாள்
கம்பராமாயணம் கங்கைகாண் படலம்
டகர எதுகை அடிதோரும் காண
ஒன்றாம் சீரிலும் நான்காம் மற்றும் ஐந்தாம் சீரிலும் மோனையைக் காணுங்கள்
முதல வரியில் செவிலியைத்தன் பாழ்த்த காய் முன் நேர் வந்து ஒரேயொரு வெண்டளை
அருகி வந்தது கவனிக்கவும்
ஆசிரிய விருத்தத்தின் ஆசிரியத்தளை விலங்கள் கூடிய இயற் சீர் தளை கலித்தளைகள்
விரவி வந்துள்ளது கவனிக்கவும்
...