கண்ணன் என்றனின் காதலன் நெஞ்சினில் - கலிவிருத்தம்
விருத்த மேடை 65
கலிவிருத்தம் - 1
(குறிலீற்று மா + கூவிளம் + கூவிளம்+ கூவிளம்)
கண்ணன் என்றனின் காதலன் நெஞ்சினில்
வண்ணம் மேவும் வழித்துணை யானவன்
எண்ணம் போலவே இன்பமுங் கொண்டவன்
திண்ணம் வாழ்வினில் தெய்வமும் ஆனவன்!
- வ.க.கன்னியப்பன்