யாரு கணவன் யாரு மனைவினு தகராறு வரக்கூடாது

அடியே விம்லா?

என்னடி கம்லா?

சின்ன வயசிலிருந்தே நாம இரண்டு பேரும் நெருங்கிய தோழிகள். ஒண்ணாப் படிச்சோம். ஒரே துறையில ஒரே ஊரில் வேலை. நம்மை யாரும் பிரிக்க முடியாதபடி எதாவது செய்யுணுமே.

நீ சொல்லறதும் சரிதான்டி விம்லா. நாம் இரண்டு பேரும் திருமணம் பண்ணிக்கலாமா?

நம்ம சமுதாயம் அதை ஏத்துக்குமா?

சில ஊர்களில அதுபோல நடக்குதாமே. ஒரு வட மாநிலத்தில ஒரு பொண்ணு அவளையே திருமணம் பண்ணீட்டாளாம். அதுவும் சாத்திர சம்பிரதாயப்படி அவளே அவ கழுத்தில் தாலியைக் கட்டிட்டாளாம்.

நம்ம பெற்றோர் இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க.‌

நாம் ஒரு வழக்குரைக் கேட்டு அவர் ஆலோசனைப்படி பதிவுத் திருமணம் செஞ்சுக்கலாம். ஊர்ல நாலு பேரு நாலு விதமாகப் பேசுவாங்க. இது நம்ம வாழ்க்கை. நம்ம உரிமை.

உனக்கும் எனக்கும் அக்கா, தங்கச்சி யாருமில்லை. தம்பிங்கதான். நம்ம திருமணத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. நாம் தனிக்குடித்தனம் போறோம். நம்மை வளர்த்து ஆளாக்கிய‌ பெற்றோர்களுக்கு நன்றிக்கடனா நம்ம சம்பளத்தில ஆளுக்குப் பாதி கொடுத்திட லாம். உனக்கு நான் தாலி கட்டுவேன். எனக்கு நீ தாலி கட்டுணும். நம்ம திருமணத்தைப் பதிவு செய்யறதால நம்மை யாரும் அசைக்க முடியாது.

ஆனா ஒண்ணுடி. நமக்குள்ள யாரு கணவன் யாரு மனைவினு எப்பவுமே தகராறு வரக்கூடாது.

இரண்டு பேரும் சாமி முன்னாடி கற்பூரத்தை அணைச்சு சத்தியம் செய்யணும்.

ஆமான்டி

எழுதியவர் : மலர் (12-Jun-22, 5:53 pm)
சேர்த்தது : மலர்1991
பார்வை : 97

மேலே