சாமி குத்தம் ஆகிடும்

சோசியரிடம் சென்ற பாட்டியிடம் சோசியர்:
பரமேஸ்வரி பாட்டி. என்ன விஷேசம். ரொம்ப நாள் கழிச்சு எங்கிட்ட வந்திருக்கீங்க?
#######
வணக்கம் சோசியல் ஐயா. எம் பேரன் சிவ்வோட (சிவா என்ற தன் பெயரை பேரன் ஷிவ் என்று மாற்றிக்கொண்டான்) மனைவி நேத்து காலைல அஞ்சு மணிக்கு ஆண் கொழுந்தை பொறந்திருக்குது. அதுக்கு ராசி பலன் சொல்லி சாதகம் எழுதிக் குடுங்க.
#######

குழந்தை பிரம்ம முகூர்த்தில பிறந்திருக்கு. செல்வ செழிப்போடு வாழ்வான். வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அங்கேயே நிரந்தரமாக்க தங்கிடுவான். நீங்க இன்னும் இருபத்தஞ்சு வருசம் உடல் நலத்தோடு இருந்த நீங்களும் அங்க போயி தங்கி உங்க கடைசிக் காலத்தை ஜாலியாக் கழிக்கலாம்.

######
ரொம்ப சந்தோசமுங்க சோசியல் ஐயா. பையனுக்கு நீங்களே தமிழர்கள் வழக்கப்படி வைக்கிற, எந்தத் தமிழனும் தன் பிள்ளைக்கு வைக்காத பேரா வச்சிடுங்க சோசியல் ஐயா.
#######
ராசி பலன் சொல்லி கம்ப்யூட்டர் ஜாதகம் தயாரிப்புத் தர கட்டணம் ஐநூறு. புதுமையான இந்திப் பேரு வைக்க ஐநூறு. ஆகமொத்தம் ஆயிரம். தட்சிணைத் தட்டில் வச்சிடுங்கோ.
நான் இன்னிக்கு ஆங்கில நாளிதழில் புதுமையான பேரு 'மஹாகல்'. அந்தப் பேரை மே வச்சிடுங்க.

#######
என்னங்க சாமி 'பெரிய கல்'னு பேரு வைக்கப் சொல்லறீங்க?
#######
பரமேஸ்வரிப் பாட்டி. இது சாமி பேரு. சிவபெருமானைப் குறிக்கும் பேரு. சிவலிங்கத்தை கண் குறிக்கும் பேரு. இதைப் போயி 'பெரிய கல்'னு சொல்லிட்டீங்க. சாமி குத்தம் ஆயிடுச்சு. வீட்டுக்குப் போயி தலையோட குளிச்சு கடவுள் சிவலிங்கத்துக்கு பல் படையல் போட்டு கடவுள் கிட்ட மன்னிப்புக் கேளுங்க. எல்லாம்வல்ல இறைவன் உங்களை மன்னிப்பார். சாமி குத்தம் நீங்கும்.
######
ஐயோ கடவுளே என்னை மன்னிச்சிடு சாமி. இதுமாதிரி தப்பி இனி நான் செய்யமாட்டேன். (தட்டில் ரூ. ஆயிரத்தை வைத்துவிட்டு பரமேஸ்வரி பாட்டி செல்கிறார்.)

எழுதியவர் : மலர் (13-Jun-22, 12:03 pm)
சேர்த்தது : மலர்1991
பார்வை : 129

சிறந்த கவிதைகள்

மேலே