என்ன பாட்டி எண்ணிட்டு இருக்கறீங்க
எனக்கு யாருடா காசு குடுத்தாங்க, எண்ணிப் பார்க்க.
என்னவோ "காசு, காசு, காசு" பல தடவை மெதுவாகச் சொல்லிட்டிருந்தீங்களை. அதுதான் கேட்டேன்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி புதுசா யாரோ வெளியூருப் பையன் இந்த வழியாகப் போனான். அவனைக் கூப்புட்டு "யாருடா நீ? உம் பேரு என்னடா?"ன்னு கேட்டேன். நம்ம ஊருல யாருக்கோ உறவுக்காரப் பையனாம்.
அவள் பேரைச் சொன்னானா?
'ஆக்காசு'னு (Akash) சொன்னான். அவள் பேருல 'காசு' வருவேன்னு நாந்தான் "ஆக்காசு, இக்காசு, ஈக்காசு, உக்காசு, ஊக்காசு, எக்காசு, ஏக்காசு"னு சொல்லிட்டிருந்தேன். அது உங் காதுல விழுந்திருக்கும். சனங்க என்னென்னவோ பேரையெல்லாம் வைக்கிறாங்க முத்து.
##########
Akash = Sky