நைனா

எனக்கு எதுக்கு அப்பா 'நைனா'-னு பேரு வச்சீங்க?

ஏம்மா, என்ன ஆச்சு. நான் பள்ளிப் படிப்பை முடிச்சதும் சென்னையில் அம்மா படிச்சு கல்லூரில சேர்த்து கல்லூரி விடுதில தங்கிப் படிக்க பணம் கட்டிட்டீங்க. சென்னை போனதிலிருந்து எங்க போனாலும் "இன்னா நைனா. கசமாலம்"னு தெருவில் போற சென்னைவாசிகள் பலர் பேசறாங்க.

சென்னையிலே பொறந்து வளர்றவங்க அப்பிடித்தான் பேசுவாங்க. அது சென்னைத் தமிழ். உம் பேரு இந்திப் பேரு நைனா.

இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்?

என்ன அர்த்தமோ நான் என்னத்தைக் கண்டேன். ஒரு பிரபல பெண் இந்தி எழுத்தாளர் பேரு நைனா. அந்தப் பேரை உன்னோட அம்மாதான் உனக்கு வச்சாங்க.

இல்லப்பா, கல்லூரில என் வகுப்புத் தோழிங்க, விடுதில இருக்கும் மாணவிகள் எல்லாம் என்னை பாக்கிற போதெல்லாம் "இன்னா நைனா. செளக்கியமா"னு சொல்லி கிண்டல் பண்ணறாங்க அப்பா.

அதப்பத்திக் கவலைப்படாதே நைனா. எத்தனை நாளுக்குச் சொல்லுவாங்க. கொஞ்ச நாள் ஆனா எல்லாம் சரியாகிடும்.
#################################

Naina = Eyes

எழுதியவர் : மலர் (11-Jun-22, 9:37 pm)
சேர்த்தது : மலர்1991
பார்வை : 72

மேலே