உன் விதியை யாரால் மாத்த முடியும்
நல்ல குடும்பத்தில் பிறந்து
நம்பிக்கையாய் வளர்ந்து
படிப்பில் பல தேர்ச்சி பெற்று
பாதையோரமாய் நீ நிற்கையிலே ...
ஒரு படிக்காத மேதை வந்து
பகிடியாய் பல வார்த்தை சொன்னதும்
காதல் வந்தது....
கனவும் வந்தது ....
கைப்பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது ..
பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தாய்
ஊரார் சிரிக்க ,
உறவினர் பதைக்க..
பெற்றோர் எதிர்க்க ..
ஊரை தாண்டி வீட்டை பகைத்தாய் ..
காலம் விரண்டோடியது
கற்ற கல்வியும் கை கொடுக்கவில்லை
ஒரு பிள்ளை ..இரு பிள்ளையானது ..
கணவனும் வாலிபப் பசியோடு
கரம் கொண்டவளை கைவிட்டு
கள்ளக் காதலுடன் விரோண்டோட்டம் ..
------------------------------------------------------------------- காட்சி மாற்றம்
என்ன வாழ்க்கை !!! என்று
இறைவனிடம் வேண்டினாய் ...கதறினாய் ..புலம்பினாய் ..
-------------------------------------------------------------------- இறைவனும் இறங்கினான் ...
உன் வாழ்க்கை கட்டங்கள்....சோகங்கள் ...தரித்திரியங்கள் நீக்கப்பட்டு
உனக்கு மறுபடியும் யௌவனப்பருவம் வரமாக கொடுக்கப்பட்டது
------------------------------------------------------------------------------------------------------------
திரும்பவும் வாழ்க்கை ஆரம்பம் ...jQuery171045291178320834624_1655290001926???
முடிவினில் :
-*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*-
அதே ..............பாதையோரம் ..
அதே ..............படிக்காத மேதையின் பகிடி வார்த்தை !!!!!!!
-*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*-