மகிழ்ச்சியின் சாரலில் நனைந்து மீண்டது
சொந்த ஊரின் எல்லைக்குள்
கால் வைத்தவுடன்
எத்தனை மகிழ்ச்சி..
எனக்கு மட்டும் அல்ல
இயற்கை அன்னைக்கும் ..
வணக்கம் சொல்லி வரவேற்கும்
வாழை மரங்கள்
வழி நெடுக காவல் புரியும்
மலைத்தொடர்கள்
வழிெயல்லாம் மஞ்சள் பூசும்
சரக்கொன்றை மலர்கள்
பன்னீர் தெளிக்கும்
மேகக்கூட்டங்கள்
தெம்மாங்கு இசைக்கும்
தென்னை மரங்கள்
மண் வாசம் மனதின்
வாசத்தோடு கலந்து நிற்க
காதுகளை கூசச் செய்தது
குளிர்காற்று
பகலுக்கு பிரிவு மடல்
எழுதிக் கொண்டிருந்தது வானம்
எல்லாம் எனக்குள் ஏதோ செய்ய
மனதுமகிழ்ச்சியின் சாரலில்
நனைந்து மீண்டது ...
அன்புடன் ஆர்கே..