ஈசனே போற்றி பாகம் 6
உன்னை காண தேடி சென்ற, ஆலயங்கள் எத்தனை.
ஆலயத்தில் உன்னை காண, பக்தர் கூட்டம் எத்தனை.
கண்கள் உன்னை காண கொண்ட, ஏக்கங்கள் தான் எத்தனை.
உன்னை வந்து சேர்ந்துகொள்ள, எடுத்த பிறவி எத்தனை.
பக்தி கொண்டு வருகையில் உன், சோதனைகள் எத்தனை.
உன்னை சேர வழிகள் காட்டும், பாதைகள் தான் எத்தனை.
பஞ்சபூதமாய் விளங்கும், அற்புதங்கள் எத்தனை.
இடத்திற்கு ஏற்ப பூஜை செய்ய, வழிமுறைகள் எத்தனை
தொண்டருக்கு தெண்டராய் நீ, விளங்குகின்ற போதிலே.
ஐந்து எழுத்து மந்திரம் என், மனதில் நின்ற போதிலே.
அனைத்து உயிரும் நீயே என்ற, உண்மை உணர்ந்த போதிலே.
மந்திரங்கள் வழிமுறைகள், எதுவும் தேவையில்லையே.
நீயே தந்த உணவில் பங்கு, நான் உனக்கு தருகிறேன்.
நீயே தந்த தமிழில், வார்த்தை சேர்த்து கவிதை எழுதினேன்.
நீயே தந்த அறிவை கொண்டு, ஞானம் பெற விழைகின்றேன்.
நீயே என்தன் மனதில் என்றும், வாசம் செய்ய அழைக்கின்றேன்.