ஈசனே போற்றி பாகம் 5
உடல் தந்த தாய்க்கும், அதில் உயிர் புகுத்த தந்தைக்கும், நான் பிறக்க வழி காட்டினாய்.
என் ஆன்மாவாய் குடிகொண்ட, ஈசனே, என்னை ஏன், மீண்டும் நீ பிறக்க வைத்தாய்.
என் கடமை யாதென, உணராமல் இவ்வுலகில், அலைவதின் அர்த்தம் என்ன.
உள்ளத்தில் குடிகொண்ட,
ஆற்றலும் யாதென, உணராத காரணம் என்ன.
பாவச்சுமை தீராமல், மென்மேலும் தவறிழைத்து, அறியாமையில் மூழ்கி கிடந்தேன்.
தவறுகளை சரி செய்ய, ஞானம் பெற வழி அறியா, உன் சரணம் நாடி வந்தேன்.
இறைவா உன்னை சரண் அடைந்து, என் கடமை ஆற்றவே, நல்வழியை வேண்டுகின்றேன்.
நோயற்ற உடலும், எந்த பற்றற்ற வாழ்வுதனை, உன்னிடம் வேண்டுகின்றேன்.
அறிவற்ற மாணவன், தெளிவு பெற வேண்டி, உன்னை குருவாக ஏற்றுக்கொண்டேன்.
தவறான பாதையில், செல்லாது காத்து என்னை, அருளிடும் வரம் வேண்டினேன்.
பல மலர்கள் கொண்டு உன்னை, பூஜித்து வந்த என்னை, தவறாமல் ஏற்றுக்கொள்வாய்.
மலர்களுடன் என்னுடைய, சமர்ப்பணம் தந்தேன், தட்சணை ஏற்றுக் கோள்வாய்.