ஈசனே போற்றி பாகம் 7
ஆன்மாவுக்கு ஞானம் தேடி, ஜென்மம் பெற்று வருகிறோம்.
நுண்ணுயிராய் இருந்த நாமும், மனிதனாக மாறினோம்.
ஆத்ம ஞானம் பெற்று எங்கள், ஜென்மம் தீர்த்து வருகிறோம்.
ஆத்ம ஞானம் தேர்ச்சி பெற, மானிட பிறவி எடுக்கிறோம்.
கல்வி, அறிவு, பயிற்சி, முயற்சி, அனைத்தும் கற்க எண்ணினோம்.
பாசம், கோபம் போன்ற உணர்ச்சி, தடைகள் என்று உணர்கிறோம்.
ஆயிரம் பிறவி எடுத்து கற்ற, ஞானம் போதவில்லையே.
உம்மை சேரும் ஞானம் பெற்ற, குருவை தேடி அலைகிறோம்.
ஞானத்தின் களஞ்சியம் நீ, தக்ஷிணாமூர்த்தியே.
எம் பாவம் நீங்கும் வழியை காட்டும், என் அப்பன் ஆன ஈசனே.
அரக்கருக்கும், தேவருக்கும், பேதம் பார்க்காத நடுவனே.
மோட்ச ஞானம் தந்து எம்மை, சேர்த்துக்கொள்ளும் ஈசனே.
கற்றுக்கொள்ள மனமும் உண்டு, முயற்சி செய்யும் குணமும் உண்டு.
உன்னிடத்தில் சரணடைந்து, பயிற்சி செய்ய பக்தி உண்டு.
நீயே காட்டும் பாதை சென்று, அனுபவங்கள் பெற்று கொண்டு,
சரண் அடைந்த மனதில், கற்ற ஞானம் பெருக்கும் உறுதி உண்டு.
வார்த்தை கொண்டு, உடலை கொண்டு, மனதால் செய்த பாவமே.
லாபம் சேர்க்க செய்த துரோகம், கோபம் செய்த நாசமே.
ஆசைக்காக சொன்ன பொய்கள், தவறை மறைக்க மறைத்த உண்மை.
செய்த குற்றம் என்னை தள்ள, கைகொடுக்கும் ஞானமே.
குருவாய் உம்மை ஏற்ற பின்பு, ஞானதானம் வேண்டினேன்.
தானமாய் நீ தந்த ஞானம், பெற்று உம்மை சேருவேன்.
ஈசன் தந்த ஞானம் கொண்டு, உலக நன்மை எண்ணினேன்.
மோட்சம் பெறும் ஞானம் வழங்க, அனுதினமும் வேண்டினேன்.