ஈசனே போற்றி பாகம் 8

மனதில் என்றும் நன்மை வளர, பயத்தை அளிக்கும் பைரவா.

கருணை உள்ளம் கொண்டு எம்மை, காத்திடும் மகாதேவா.

வாழ்வின் அர்த்தம் அறியா எமக்கு, நல்வழி காட்டும் குருதேவா.

கபடம் அற்று கடமை ஆற்றும், எம்மை சேர்க்கும் ஈஸ்வரா.

அப்பன் என்று உன்னை ஏற்று, சரணடைந்து விட்டவன்.

உன்னை மட்டும் நம்பியே, நீ காட்டும் வழியில் செல்பவன்.

ஆத்ம ஞானம் பெற்றுக்கொள்ள, உன்னை தேடி வந்தவன்.

மோகம், பாசம் வேறு என்று, உன்னை கண்டு உணர்ந்தவன்.

கோபம், மோகம், துரோகம் போன்ற, துஷ்டம் அற்ற பாதையில்,

ஞானம் பெற்று மோட்சம் அடைய, குருவை தேடி அலைகையில்.

தக்ஷிணாமூர்த்தி உந்தன், கீர்த்தி பற்றி கேட்கையில்.

தானம் கேட்கும் ஏழை போல், சரணடைந்தேன் உன் பாதத்தில்.

நீ தொண்டனுக்கு தொண்டன் என்று, கேட்டு அகந்தை மடிந்ததே.

சாம்பல் பூசும் எளிமை கண்டு, மோகம் ஆசை தீர்ந்ததே.

உன் ஞானம் பெற்றும் அமைதி கண்டு, பேச்சின் அருமை புரிந்ததே.

உன் பக்தனாய் இருப்பதால், என் பாவம் அனைத்தும் தீர்ந்ததே.

எழுதியவர் : Vignesh (19-Jun-22, 6:58 pm)
சேர்த்தது : Vignesh
பார்வை : 12

மேலே