நதியின் காதல்
நதியின் காதல்
பூமியில் வளைந்து
நெளிந்து
பாம்பை போல்
விரைந்து சென்று
கொண்டிருக்கிறாள்
நதி ஆனவள்
இவளின் காதலை
எவரும் அறியார்
காதலன் சூரியன்
கோபத்தில்
மேகத்தில் தன்னை
பிரித்து பூமிக்கு
அனுப்பியும்
அவனை
அடைவது லட்சியம்
தன்னை அவனிடம்
அடைக்கலம் கொடுக்க
விரைந்து
சென்று கொண்டிருக்கிறாள்
கடலை நோக்கி
அவள் தான்
இவள் மனம்
அறிந்து
அவளை உள்
அழைத்து அணைத்து
அவனிடம் சேர்த்து
வைப்பதால்..!