இயற்கையின் அதிசயம்

இயற்கையின் ரகசியம்;
அதில் இருக்குது பல அதிசயம்;
இயற்கையின் ரகசியம்
அது தரும் புது சுகம்
மேகங்கள் ஓடும் ஓடும் அது தானே வந்து கூடும்;
வையகத்திற்கு மழையைப் பொழியும்;
மண்நீரும் மணக்கும், மரம் செடி கொடிகளை வளர்க்கும்;
மலை காடு தாண்டி ஊற்றாய் ஊரணியாய் சிற்றோடையாய் அருவியாய் ஆறாய் ஓடி ,
அலைகள் சுமக்கும் கடலில் வந்தே சேரும்;

மண்நீரும் மணம் வீசும்;
மண்ணும் மலையும் அடர்ந்த நிழல் காடும், புவியின் அரணாகும்;
வானில் உதயனன் உதிக்க வையகம் விழிக்கும்;
துகில் கொண்ட பொழுதும்,
யாரையும் கேட்காமலே துடித்தே புலரும்;
வானம் அது வானம் , வண்ணஜாலம் தீட்டும்,
மாலையில் அழகு ஓவியத்தை வடிக்கும்,
வாஞ்சையில் மனதை இழுக்கும்;

நாளிகையும், நொடியும், மணித்துளியும், பொழுதும்,
நேரத்தையும், நாட்களையும், காலங்களையும் தரும்;
தென்றலும் வந்தே தீண்டும்;
தேடித் தேடியே குயிலும் பாடும்;
ஆன மழையால்
கான மழை காட்டில் பொழியும்;
காதல் லீலைபுரியும் பறவைகளும்;
இயற்கை தரும் மறக்க முடியாத புது சுகம்;
மாற்றம் தான் அதன் வேதம்;
மனதில் பிறக்குது இனிய தாகம்;
சுமக்குது, சுமக்குது பருவங்களையும்;
இயற்கையை மாற்ற நினைத்தால் வரும் சோகம்

வாழ்க்கை என்பது பாடம்; அது ஓடமாய் ஓடும்;
வாட்டும் வாட்டும் ஒதுங்கி நின்றால் வாட்டும்;
வாழந்து பார்த்து ரசித்தால் அது தேடும்;
இயற்கை தரும் புது மணம்;
இதயம் ஏனோ ஏங்குது தினம் தினம்;
இயற்கை இசைக்கும் புது புது ராகம்;
இதற்கு இல்லை ஈடு இணையும்; இயற்கை தரும் புது புது பாடம்,
இறக்கை அடித்து பறக்க நினைக்குது மனம்;

இயற்கை சுரப்பது புது சுகம்;
புவியில் பூங்காற்றும், புதுப்புனலும் புறப்பட்டு வருவது தனி சுகம்;
பறக்குது பறக்குது வான்மேகம்;
வளைந்து வளைந்து வந்தே தழுவுவது இன்ப சுகம்;
விளைந்த பயிர்களும் வயலில் தலை சாய்தே ஆடும்
விழுந்த பனி துளிகள் தூவியே விளையாடும் இந்த குளிர்காலம்.
வசந்த அழைப்பை தரும் இலை உதிர்காலம்;
வருத்தும் அனலைக் கக்கி அக்கினி குழம்பாய் படுத்துது கோடை காலம்;
வந்தே கொட்டோ கொட்டென்று கொட்டி தரும் மழைகாலம்;
வடித்தே திகைக்க வைக்கும் மலையருவி;
படுத்து உறங்க பாக்குது இந்த பொழுதும்;
படர்ந்த தோகையை விரித்தே ஏங்குது, இந்த ஆண் மயிலும்,
புவியே பூரித்து கிடக்கும்,
பூசியே சுமக்குது இரவு பகலையும்
புறப்பட்டு வருது வசந்த காலம்.
பூத்துக் குலுங்குது இந்த பூ வானம்
விண்ணில் தாரைகள் பூத்து பூச்சரமாய் தொங்கும் விண்பாதையில் ;புரியாமல் சிரித்தே திகைக்கிது;
இரவில் விளக்கேற்றி விளையாடும் இந்த புது நிலவும் ஏங்கியே தேய்ந்து வளரும்;
கிழக்கே கீழ்வானத்தில் உதிக்கிது ஞாயிறு,
கிடு கிடு என்றே உயர வந்தே எழுப்புது பொழுதை;
விடியலும் எழுந்தே உதிக்கும்
உதயனனும் உச்சிக்கு வந்தே வதைக்கும்;

அடிக்கும் அலைகளும் ஆடல் அரங்கேற்றம் செய்யும் நாட்டியத்தை;
தொடுவானம் தொட்டும் தொடாமலும் வெக்கப்படும்.
உச்சைத் தொட ஓடுது உதய சூரியனும்;
உறிஞ்சியே குடிக்குது உச்சி வெயிலும்;
உலகை சுற்றிவந்தே மேற்கே விழுந்து உறங்கத் தவிக்கும்; விழுபருதியும்;
மேற்கே விழும் செம்பருதியும் கீழ்வானில் இளம் சிவப்பை காச்சியே ஊற்றும்.

சிவந்த செவ்வானம், சினந்த கடல் அலைகள்;
பொன்னிற ஆடையை போத்தி,
அந்திப்பொழுதும் பந்தி விரிக்கும்;

பொதிகைத் தென்றலும் புறப்பட்டு வந்தே இதயமாய் வீசும்;
சுகமான காற்று சுற்றி வந்தே சுறுசுறுப்பை மூட்டும்

பிரபஞ்சத்தில் வெடித்து
பிறந்த புவிதான்,
பிசைந்து படைத்த அழகு தான்;
இயற்கை படைக்கும் எழில் ஓவியம்,
பசுமை படர்ந்த விளை நிலம்,
பாய்விரிக்கும், இந்த நிலம்,
பூக்களின் சிரிப்பு,
பூத்துக்குலுங்கும் மலர்களின் விரிப்பு;
எங்கும் கொட்டிக்கிடக்கும் அழகு;
காடுகள் காட்டும் அதிசய உலகம்
கணக்கில்லா அதிசயங்கள் பிறக்கும்;

பசுமைச் சாலைகள் தான், பூத்துக் குலுங்கும் பூஞ்சோலைகள் தான்;
படுத்துறங்கும் அழகுதான்,
பசியைத்தீர்க்கும் காய் கனிகள், காய்த்துக்கிடக்கும் சோலைகள் தான்;
பறவைக் கூட்டங்களின் இசை ராகம்;
புதிய வானம்; புதிய பூமி; தினம் தினம் தீட்டும் அழகை;

மழை காலத்தில் மண்டுது கருவுற்ற கார்மேகம்;
பூமழைச்சாரல் பொழிந்தே நனைக்குது புவியை;
வான வீதியில் வரைந்த வானவில்,
வண்ண நிறங்களில் விண்ணுக்கு பாதை வடிக்கும்;
விழுந்த மழைத்துளிகளை சுமந்த இலைகள்
வெட்கத்தில் தலையை சாய்க்கும்;
மழை நீருக்கும் மண்ணுக்கும் பிறந்த தாபம் தான்;
தனிந்தது வேட்கை தான்;
மலைதாண்டி வந்த சிறு ஓடை,
பாய்ந்து வரும் நீர் அருவி, பள்ளத்தாக்கில் விழுந்தே வடிக்கிது அழகை;
நெளிந்து வளைந்தோடும் ஆறு,
நெறுங்கிவந்தே நீர் பருகும் மான் கூட்டங்கள்;
பார்க்க பார்க்க நெகிழும் மனமும்;
உடல் எங்கும் வண்ணம் பூசி சிறகடித்து சிரித்து பறந்தே வலம் வரும் பட்டாம் பூச்சிகள்;

சினம் கொண்ட மந்தி இனங்கள்;
வலம் வரும் யானைக்கூட்டம்;
சீறும் சிறுத்தைகள்;
ஓடும் மான்;
உறவாடும் கிளிப்பிள்ளை;
பாடும் வானம் பாடி;
ஆடும் மயில்;
அலையும் நரி; எத்தனை எத்தனையோ ….
காட்டுக்குள் வாசம்;
கட்டிலடங்கா மோக வேசம்,
தூரிகை எடுத்து தூவி விட்ட வண்ணக்கோலங்கள்,
தாவி வரும் கட்டுக்கடங்கா ஆசைகள்;
அது போடும் அழகு கோலம்;

பனித்துளிகள் படர்ந்த புள்வெளிகள்
பரவசப் பயணம் தான்,
பார்த்து ரசித்தாலே,
பசியைபோக்கும் தான்;
தடாகம் தாங்கும் தாமரை மலர்கள்
தட்டு தாம்பலம் போன்று தன் மடலை விரிக்கிது கதிரவன் வருகையால்;
படுத்துக் கிடந்த பாரிஜாதமும் பசியை தீர்க்க
நிலவைத் தேடுது இரவில்;
இரவு பகலிலும் இயற்கையின் வேட்டைதான்;

இயற்கையின் அதிசயம் அது இறைவனின் கலை நயம்;
இயற்கையின் ரகசியம்
அது தரும் இன்ப சுகம்;
இயற்கையின் அதிசயம் இன்னும் பேசுவது தனிசுகம்.
இயற்கையை அழிக்காதே;
இருண்ட உலகை படைக்காதே.
அதிகாலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ . முத்துவேழப்பன் (23-Jun-22, 9:06 am)
பார்வை : 448

மேலே