அமைதி இல்லா மனித சமுதாயம்

மேகங்கள் தவழும் மலைகள் உச்சியிலிருந்து
ஒன்றாய்ப் பலவாய் உருவாகும் ஓடங்கள்
கீழே பள்ளதாக்கில் வந்திறங்கி ஒன்றிணைந்து
ஒரு மாநதியாய் உருமாறி ஓடுகின்றது

நதிகள் பள்ளதாக்கில் உதித்து வளர்ந்த
மனித சமுதாயம் ,நாகரீகம், ஏனோ
வாழ்வில் ஒன்றிணைந்து இன்பம் பகிர்ந்திட
அந்த ஓடும் நந்தியிடம் கற்கவில்லை

நிறத்தால், மதத்தால் மண்ணால் மதம்கொண்டு
பிரிந்தே என்றும் வாழ நினைக்கின்றதே இன்றும்
எல்லாம் இருந்தும் அமைதி காணாது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jun-22, 5:21 pm)
பார்வை : 74

மேலே