வாழ்க்கை தத்துவம்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

*என் மொழி*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

நமக்கு
ஒன்று நடக்கும் வரை
அது
நமக்கு வேடிக்கை தான் என்று சொல்வார்கள்
அது
நமக்கு நடக்கும் போதும் வேடிக்கையாக
பார்க்க கற்றுக் கொண்டால்
வாழ்க்கையில்
வென்றுவிடலாம்....!!!

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

யார்
யாரையும் திருத்திவிட முடியாது
திருந்துவதற்கு
வாய்ப்பு மட்டும் தான்
தர முடியும்.....!!!

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இன்பம் கூட
மற்றவர்களால் வரலாம்
ஆனால்
துன்பம் என்னவோ
நம்முடைய
அறியாமை
கவனக்குறை
அலட்சியம்
பொறுப்மின்மை
சிந்தித்து செயல்படாமையல்தான் வருகிறது....!!!

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

இறைவனிடம் கூட
எதையும் கேட்காதே
உனக்கு
தகுதி இல்லாததைக் கேட்டாலும் கொடுக்கமாட்டான்....
உனக்குத் தகுதியானதை
கேட்காமல் விட்டாலும்
கொடுக்காமல்
இருக்கமாட்டான்....!!!

*கவிதை ரசிகன்*

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

எழுதியவர் : கவிதை ரசிகன் (20-Jun-22, 9:23 pm)
பார்வை : 84

மேலே