பூச்சூடியது யாருக்க்காக

நேரிசை வெண்பா

அன்றலர்ந்த கோட்டுப்பூ தன்னை யணிதலை
பொன்றென் றனள்தடுத்து பொங்கினள் -- என்சொல்ல
என்மாலை காட்டு மெவளுக் கடையாளம்
என்று சினந்தனள் இன்று

கோட்டுப்பூ = மரத்தின் , செடியின் பூக்கள்


ஆணும் பெண்ணும் கழுத்திலும் தலையிலும் அன்று பூச்சூடும்
வழக்கம். இவனோ மாலைசூடிட காதலியோ அவனைப்பிடித்து
உலுக்கினாள். நான் உனக்கு காதலியாயிருக்க நீர் எவளுக்காக
மாலயணிந்து அடையாளம் காட்டுகிறீர்கள் என்று கோபித்து
சிணுங்கினாளாம்.


காமத்துப்பால். குறள். 3/24. வதுப்பாடல்

...........

எழுதியவர் : பழனி ராஜன் (21-Jun-22, 6:14 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 388

மேலே