மதுவை ஒழிப்போம் மாற்றுத் தொழில் படைப்போம்

#மதுவை ஒழிப்போம்.. மாற்றுத் தொழில் படைப்போம்

கதிரவன் மலர்ந்த பின்பும்
காரிருளில் பல குடும்பம்
விதித் தொலைத்து வாழ்வதெல்லாம்
வீணான மதுவினாலே பாரும் பாரும்..!

மதி கெட்டு மதுக் குடித்து
மாற்றுத்துணி யற்ற ஏழை
சதிவலையில் நாளும் வீழும்
தரித்திரத்தை மாற்றிடலாம் வாரும் வாரும்..!

கட்டியவள் கண்ணீர்க் கடலில்
கவலைகள் கழுத்து நெரிக்கப்
பொட்டும்பூவு மிழக்கு முன்னே
பொட்டிக்கட்ட வைப்போம் மது பானம் பானம்..!

கெட்டுக்குடி வீழும் முன்னே
கீழ்த் தரமாம் குடிப் பழக்கம்
எட்டி ஓடச் செய்து செய்து
இன்னல் களைக் களையத்தான் வேணும் வேணும்..!

சிந்தை தன்னில் நிறுத்துவீரே
செம்மை ஆட்சி நாயகரே
இந்த நாளின் எங்கள் குறை
இறங்கிவந்து என்னவென்று கேட்பீர் கேட்பீர்.!

வெந்துநிதம் வாழும் மக்கள்
வேதனைகள் யாவும் தீர்க்க
வந்துதானே வேண்டுகிறோம்
கவலைகளை கனிவுடனேத் தீர்ப்பீர்.. தீர்ப்பீர்..!

கொட்டும் மழை போலத்தான்
கொடுக்குந்தொழில் எமனேதான்
விட்டுவேறு தொழில் புரிய
விண்ணப்பம் வைக்கின்றோம் அரசே அரசே..!

திட்டம்பல தீட்டி ய ரசு
தெருதோரும் தொழில் பெருக்கி
பெட்டகத்தை நிறைக்கு மந்த
பெருநாள் தரும் மக்களுக்குப்
பரிசே பரிசே..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (27-Jun-22, 9:31 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 35

மேலே