விடுதலையில் பங்கு
இயல்தரவிணை கொச்சகக் கலிப்பா
முன்னை விடுதலை ஒன்றே திருப்தியென்று
என்ன மதமென்றும் எச்சாதி என்றுகேளா
அன்னை பரதகண்ட மாதா தெய்வமென்று
ஒன்று திரண்டு தொடர்ந்து பகைதனை
வென்று விடுவோ மெனநினைக்க நம்மெதிரி
கொன்று பலரை குவிக்கவும் கள்ளமிலா
நின்று அகிம்சை யிலுந்தமிழன் போராட
இன்றத் தமிழன் திராவிடனாய் மாறினானே
.......