இயல்பினை ஏற்றுக்கொள்
நமக்கு பிடித்த நபர் நம் அருகில் இல்லாமல் வெகு தொலைவில் இருக்கும் போது அரைகுறை பக்குவமற்ற மனம் என்ன செய்யும் பெரும்பாலும். அந்த நபரின் எண்ணமும் செயலும் என் எண்ணத்துடனும் மற்றும் செயலுடனும் ஒத்து போக வேண்டும் என்று என்னும். இது சாதாரண விஷமாக தோன்றலாம் ஆனால் பிற்காலத்தில் பிறருடன் நம்மை நெருங்க விடாமல் நம்மை பிரிக்கின்ற வேலையினை அழகாக செய்யக்கூடிய ஒரு கேவலமான மனநிலை என்னை பொறுத்தவரை. ஏன் இந்த மாதிரி எண்ணம் வருகிறது எல்லாருக்கும் இந்த மாதிரி எண்ணங்கள் வருமா? என்றால் இல்லை. எல்லாருக்கும் வருவது கிடையாது நாம் மற்றவரை விட அறிவில் சற்று மேல் என்று நினைப்பவர்களுக்கு வருவத்ற்கு அதிகமான வாய்ப்பு உண்டு. ஏன் வருகிறது என்று காரணத்தை உற்று நோக்கினால் நமக்கு விளங்குவது இந்த மனநிலை அல்லது எண்ணம் "இயலாமை" என்பதின் வெளிப்பாடு. உதாரணமாக ஒரு காரணமாக அல்லது சூழ்நிலை நிமித்தமாக நமக்கு பிடித்த நபரை விலகி இருக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டு இருக்கும். அப்படி இருக்கும் பொழுது நம் எண்ணங்களை அவர்களின் மீது திணிக்க முற்பட்டு அது நடக்காமல் போகும் பொழுது நம் ஏமாற்றம் அடைகிறோம். இது அதீத எதிர்பார்ப்பின் விளைவு. எதிர்பார்ப்பினை எப்படி வேண்டுமானலும் நியப்படுத்தலாம் அப்படி எதிர்பார்ப்பது தவறா என்று சப்பை கட்டு கட்டலாம் ஆனால் என்னை பொறுத்தவரை எதிர்பார்ப்பு என்பது கண் முன் இருக்கும் இயல்பினை மறுப்பதாகும். இயல்பு என்பது என்ன? ஒவ்வொரு பொருளுக்கும் அல்லது நபருக்கும் இயல்பு என்பது இயற்கையின் விதி அப்படி இருக்கும் பொழுது இயல்பினை நம் எண்ணங்களுக்காக மாற்ற முற்படுவது இயற்கைக்கு எதிரானது. ஆம் மாற்றுவதற்கு அது பழக்க வழக்கங்கள் அல்ல அது உயிரோடு ஒன்றோடு ஒன்றிணைத்து இருப்பது. எதாவது சூழ்நிலையில் அவரவர் இயல்பினை காட்டி இருப்பார்கள் அது தான் இயற்க்கை. எந்த ஒரு அந்நிய சக்தி அல்லது எது கொண்டும் இயற்கையை மாற்ற முடியாது அது போல் தான் இயல்பும். அப்படியே மாற்ற முற்பட்டாலும் அது வேறு ஒரு இயல்பாக தான் போய் நிற்க்கும் அல்லவா? உதாரணமாக என் மகளினை எடுத்துக்கொள்ளலாம் அவளுக்கோ வயது இன்னும் ஒன்று ஆகவில்லை 10 மாதங்கள் தான். அவளின் இயல்பு என்ன விளையாடுவது புதிய விஷயங்களை கண்டறிவது இது மாதிரி அவளின் இந்த இயல்பு சில நேரங்களில் எனக்கு எரிச்சல்கள் வரும் பொழுது அதை மாற்ற நான் விளைவின் அப்பொழுது நான் காணுவது சுட்டி என்ற இயல்பில் இருந்து பிடிவாதம் என்ற இயல்புக்கு மாறுகிறாள். பின்பு அமர்ந்து எண்ணி பார்த்தேன் 10 மாதத்திற்கு உள்ளாகவே அவளின் மீது எத்துணை எதிர்பார்ப்பு எனக்கு மற்றும் என் எண்ணங்களுக்கு அவள் மாற வேண்டும் என்றும் அதற்க்கு என் மனைவி ஒத்துழைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இந்த எண்ணத்தின் மூலம் என் செல்ல மகள் மழலையாக செய்யும் இயல்பான விஷயங்கள் கூட ரசிக்காமல் அவளின் இயல்பினை என் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் மாற்ற முற்படுகிறேன். அது நடக்காமல் போகும் பொழுது என் மனைவி மற்றும் பிள்ளையின் மீது அதிருப்தி அலைகளை கட்டவிழ்த்து விடுகிறேன். என்ன ஒரு மோசமான மனநிலை இது? ஏன் எல்லாம் என் எண்ணத்தின்படியோ அல்லது ஆசையின் படியோ நடக்க வேண்டும்? என்று தோன்றும் பொழுது அறிந்து கொண்டது இயலாமை மற்றும் எதிர்பார்ப்பின் விளைவே இது. இப்படிப்பட்ட மனநிலையில் தொடர்ந்து இருக்கும் பொழுது நம் சந்தோசம் மிகவிரைவில் தொலைந்து போகும். ஏன் என்றால் என் சந்தோசம் பிறரை சார்ந்து இருப்பது தான் காரணம் தான். பின்னர் தெளிந்து கொண்டேன் யாரும் உனக்கு தகுந்தார் போல் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை முதலில் நான் இருக்கிறேனா என்ற கேள்வியும் வந்தது எனவே உணர்ந்தது இங்கு அனைவரும் அவரவர் இயல்பில் தான் இருப்பார்கள் அப்படி தான் இருக்க வேண்டும் உன்னால் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் மாற வேண்டியது அவர்கள் அல்ல நீ தான் என்று விளங்கியது. எனவே இயல்பை ஏற்றுக்கொள்ளுவதால் உன் சந்தோசம் நிலைக்கும் உன் ஏமாற்றம் தவிர்க்கபடும் இயலாமை எண்ணங்கள் முற்றிலும் ஒளியும். "நம்மால் முடியவில்லை என்று இருப்பதை விட நம்மால் முடிந்ததை செய்வது சிறந்தது" அப்படி என்றால் எதிர்பார்ப்பதை விட இயல்பை ஏற்றுக்கொள்ளுவது என்று அர்த்தம். இப்படி வாழ பழகி கொண்டால் இந்த நாள் மட்டும் அல்ல எல்லா நாளும் இனிய நாள் தான். ரியாக்ட் பண்ணுவதற்கு முன் சற்று யோசி அவன்/அவள் ஏன் இப்படி செய்தேன்/தாள் அவனுக்கும்/அவளுக்கும் அறிவு உண்டு தானே...........
"மற்றவை விட என் அறிவு மேல் என்று என்னும் போது மயிறு அளவு ஏமாற்றமும் உன்னை மீள முடிய பாதாளத்தில் தள்ளும்"