ஹைக்கூ கவிதை

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

தீக்குள் இருக்கிறது

சாம்பலாகவில்லை

திரி....

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

கதவு திறந்திருக்கிறது

சன்னல் வழியாக வருகிறது

தென்றல்.....

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

என்னைத் தாண்டிப்போக

அனுமதிக்கவில்லை

என் நிழல்...

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

தராசுத்தட்டை

வீணாக வைத்திருக்கிறது

நீதிதேவதை.....

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

சட்டம் செய்யும்

தன் கடமையை

லஞ்சம் தராவிட்டால்...


*கவிதை ரசிகன்*

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

எழுதியவர் : கவிதை ரசிகன் (4-Jul-22, 10:30 pm)
Tanglish : haikkoo kavithai
பார்வை : 72

மேலே