சத்தான யுவன் யுவதியின் சங்க காதல் காதை

வான் பந்தலிட்டு வந்த மேகமும் வடித்து விட்டாள்;
வடித்த நிலவும் வதைத்த இருளுக்கு விடை கொடுக்க துடி துடித்துவிட்டாள்;
வெடித்த விடியலும் விரைந்திட்டாள்;
முழித்த வையமும், முன் வந்து வைகறைப் பொழுதை, முந்தானை விரித்துவிட்டாள்;
பசுமை மகள், பச்சை வண்ண சேலை உடுத்தி,
படுத்துறங்கி வந்துவிட்டாள்;
இயற்கை இவள் சிரித்துவிட்டாள்;
இன்பராகத்தை எழுப்பிவிட்டாள்;
இதமான முகிலை வீசியே, அனுப்பிவிட்டாள்;
பசியைத் தீர்த்துவைக்க, பழஞ்சோலையை
தந்து விட்டாள்;
பஞ்சவர்ண கிளிகள் போன்று காதல் பறவைகளை
காலைப்பொழுதில் அனுப்பிவிட்டாள்;
பஞ்சி மெத்தை போன்று மஞ்சு மேகத்தை தொடரவிட்டாள்;
நெஞ்சுக்குள் மோக தீயை மூடிவிட்டாள்;
நீல வண்ணம் பூசி ,நிலைகொள்ளாத
கடல் நங்கை, ஆசை நினைவுகளை;
அலை அலையாய் எழுப்பியே,
அன்ன நடை நடைந்தாள்;
வான் சோலையில் பூத்த வண்ண நட்சத்திரங்கள் புறப்பட்டுப்போக ;
புதுவிடியாலும் பூமிக்கு வந்துவிட்டாள்;
பூஞ்சோலைகளோ பூத்துக் குலுங்கிய சாலைகள்;
பூவிதழை விரித்தே; பூமகள் புன்னகை பூத்துவிட்டாள்;
பாய்விரித்தாள் வயல் மங்கை; பச்சை ஆடையை உடுத்தி ;
பச்சை மேனி இவள், இச்சை சுகம் தேடிவிட்டாள்,
எழுந்து வந்த தென்றல் தீண்டி,
தலை அசைக்கின்றாள்,தலை அசைக்கின்றாள்
தன்னனை மறந்து;
மலையருவி இவள் மணக்கும் சந்தனம் பூசி விட்டாள்;
மல மல வென்றே மணியோசையுடன் அரும்பிய அருவி நீரை தூவிவிட்டாள்;
மன அருவியோ பசுமைக் கனவுகளை சுமந்து விட்டாள்;
நதி இவளோ; நடை பழகி சுத்தி சேர்த்து விட்டாள்;
கூச்சம் கொண்ட ,யுவதி இவள் , நீல் விழியாள்(ல்) நிம்மதி பெருமூச்சை கெடுத்துவிட்டாள்,
காச்சி வார்த்த வண்ணப் பாவை பாதரசக் குழம்பாய் குழைந்தாள்;
காட்சிக்கு சாட்சிக்கு வந்த நாணமும், கட்டழகை அவிழ்த்து விட்டாள்;
கண்டுண்ட இவனோ, உண்டு செல்ல உயிர்த்தவம் செய்துவிட்டான்;
காதல் வயப்பட்டனர், யுவனும் யுவதியும்;
வெட்டுண்ட வேங்கையாய் ஆசை மோகத்தில் துடி துடித்து விட்டனர்;
ஆசைத் தேனீ கொட்ட, மோகத்தேன் சொட்ட, அமுதுண்ண துடி துடித்துவிட்டனர்;
பாசை மறந்தனர்; பசி மறந்தனர்; பாதையும் மறந்தனர்;
பகல் இரவையும் மறந்தனர்;
வில்லாய் வலைந்த இவர்கள்; சுவைகாவியம் வடித்து;
கல்லாய் போனார்கள், களைப்படைந்தனர்;
ஒன்றியேபோய் ஓவியமானார்கள் ஒட்டியே;
வெட்டிவிட விரும்பம் இல்லை புவி மகளுக்கும்;
தட்டிவிட தடுமாறியது முகிலும்;
எய்த மன்மத பானத்தில் வீழ்தது உடலும் உடையும்;
கொய்தது மோகம்; பொய்த்தது நாணம்;
போகத் தவித்தது வானில் நிலவும்;

வண்டுக்கும் வந்ததாம் கோபம்;
உண்ட தேனுப்பின் இப்படி உறவாட வில்லையே மலருடன் நானும், என்ற ஏக்கம் தான்;

வெட்ட வெளியில் வீற்றிந்த
பனிப்புள்ளுக்கும் எடுத்ததாம் தவிப்பு;
பனித்துளிகளின் பாரம் தாங்காது, தலைகுனிந்தது புள்ளும்;
காவியம் படைத்தனர் யுவனும் யுவதியும்; காதல் போதையில்,
தன்னை மறந்தனர், தமிழை மறந்தனர் , தன்னிலை மறந்தனர் ,
தனிமையில் வீழ்ந்தனர் , மோகத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர் , மோச்சம் இதுதானா என்று மூச்சி விட மறந்து, மூழ்கி கிடந்தனர்
ஆம்
மாண்டிலர் மீண்டிலர்;
கண்டிலர் விண்டிலர்;
விண்டவர் கண்டிலர்;
உண்டிலர் உறங்கிலர்;
மருண்டிலர் மிரண்டிலர்;
உருண்டிலர் உறைந்திலர்;
உயர் பெற்றிலர் யுவனும் யுவதியும்

உதிர்ந்த பனிக்கும் வந்ததாம் கோபம்;
உறவாடிய பறவைகளுக்கும் வந்ததாம் கோபம்;
விரட்டத்துடித்தது இரவும்,
விடுதலைப் பெற தவித்தது உடலும்;

விண்ணின் வீச்சிதான்;
விடியலின் சூழ்ச்சிதான்;
புண்ணாகியது புணர்சிதான்;
புழுவாய் துடித்தது பொழுதுதான்;
பருவ மழை பொழிந்து, அருவ நிலைக்கு போனவர்கள்
உருவம் பெற்றார்கள், உயிரும் பெற்றார்கள் மீண்டும்;
பருவச் சிலைகள் உயர்பெற்றன மீண்டும்;
பந்தலிட்டு பந்தி விரித்தது காலை பொழுதும்;
சந்தனமிட்டு சமிக்கை காட்டியது உறவும்;

பச்சை வயல் பாதைதான் பவழ ஒளி படர வர்ணங்கள் பல பூசின;
வார்த்தைகள் யுவனுக்கும் யுவதிக்கும் மீண்டும் பிறந்தன;
வாய்விட்டு சிரித்தன புல்லினங்களும், புள்ளினங்களும்;
மெல்லினம் வாசித்தது, மெல்ல முணகள் தான்;
சொல்லத் தெரியாத தவிப்புதான்;
தத்தை மொழிதான் தழுவிய காதல் தான்;
வித்தை பழகியது இவர்கள் தான்;
விடை பெற தவிப்புத்தான்;
ஆறாத ஆவலை ஆற்றி வைத்தது;
காதல் அந்தாதி தான்;

ஊறிய ஆசை ஊற்று;
உறைய வைத்தது ஊறிய காதலை ;
சத்தான இந்த யுவன் யுவதி காதல் தான்
சந்தம் வடித்த சங்க காதல் தான்
அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (5-Jul-22, 7:34 pm)
பார்வை : 15

மேலே