கவிதையின் கதை

அழகை ரசித்தால் வருவது .... எது?
வறுமை வாட்டினால் வருவது .... எது?

தமிழை நேசித்தால் வருவது .... எது?
காதலில் தோற்றால் வருவது .... எது?

மனது வலித்தால் வருவது .... எது?
பூக்களைப் பார்த்தால் வருவது .... எது?

நண்பனை இழந்தால் வருவது .... எது?
உயிரோடு உயிர் பேசுவது ......... எது?

உணர்வுகளின் வடிகால்.....ஆனது .
வார்த்தைகளின் வரிசை ... .ஆனது .

இறுதியில் பிரசவம் ஆனது .... கவிதை
இறுதியில் பிரசவம் ஆனது .... கவிதை

எழுதியவர் : ஞானதரிசினி ஞானி (6-Oct-11, 11:45 pm)
சேர்த்தது : Gnanatharsini Gnani
பார்வை : 294

மேலே