தெளிவு

அறிந்ததை அளவின்றி
கற்றுக்கொடு,
அறியாததை அச்சமின்றி
கற்றுக்கொள்,

புரிந்தோரை பொலிவுடன்
ஏற்றுக்கொள்,
புரியாதோரை பணிவுடன்
விலக்கிக்கொள்,

தெரிந்ததில் தெளிவாக
நடந்துசெல்,
தெரியாததில் தெளிவோடு
நகர்ந்துசெல்.

எழுதியவர் : இ.பொன்ராஜ் (8-Jul-22, 6:10 pm)
சேர்த்தது : இ பொன்ராஜ்
பார்வை : 69

மேலே