ஒப்பனை வாழ்க்கை
நீ வாழும் இந்த வாழ்வதனை
பிறர் வாழ்வுநிலையோடு
ஒப்பிட்டு ஒப்பனை வாழ்க்கை
வாழ்தல் தேவையற்றது,
நீயே உன் வாழ்வின்
ஒட்டுமொத்த அதிபதி,
உன்னை உன்னிடமே
ஒப்படைத்து வாழப் பழகு,
பள்ளம் மேடுகளில்லா
வழிகளும் இல்லை
வாழ்க்கையும் இல்லை,
பயணத்தின் எல்லையில்
யாவரும் சமமே...