கடைசி கடிதம்

நான்,
கண்விழுங்கிய மலையும் ,கால் நினைத்த கடலும் ,
கல்லும் ,மண்ணும், மரமும் ,
உறவும் நட்பும் காணவில்லை. மாயமானது இவையல்ல நான் இறந்து விட்டேன்.

நான் என்பது யார்?
ஐம்பொறியும் ,கை கால் எலும்பும்
சதையும் ,ரத்தமும் கொண்ட உடலா?உணர்வும் அறிவும் ஆற்றலும் கொண்டு உலகம் அறிந்த கருவி உயிரா?
ஊன் உடல் கொண்டு அறிந்தவரையும், அறியாதவரையும் பேசிய சொல்ல ?
நான் என்பது செயல்.
உண்மை கண்டு, உழைப்புக் கொண்டு அனைத்தும் சமம் என நடக்கும் செயல்.

"பிறப்பின் முடிவு இறப்பு
இறப்பின் தொடக்கம் பிறப்பு "எனும் வாழ்க்கையின் புரியாத புதிருக்கு விடை தெரிந்த வினாடிக்கு பின்
இயற்கையின் மணி மண்டபத்தில்,நான் செய்த செயல் வாழும்! வாழட்டும் !
இடம் இருந்தால் உங்கள் இதயத்திலும்
-இப்படிக்கு அருண்

எழுதியவர் : அருண் (11-Jul-22, 1:11 am)
சேர்த்தது : arun
பார்வை : 169

மேலே