கிராமத்திற்கு ஒரு கவிதை
🌳🌴🌳🌴🌳🌴🌳🌴🌳🌴🌳
*கிராமத்திற்கு*
*ஒரு கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🌳🌴🌳🌴🌳🌴🌳🌴🌳🌴🌳
*கிராமம்.........*
பண்பாடு
கலாச்சாரத்தை
பராமரித்து பாதுகாக்கும்
கலைக்கூடங்கள்......
முன்பின்
தெரியாதவர்களுக்கு
பிரச்சினை
ஆபத்து என்றால் கூட
முடிந்ததை செய்
முன் வரும்
உதவிக்கரங்கள்.....
ஒருவனுக்கு ஒருத்தி
ஒருத்திக்கு ஒருவன் என்ற
பண்பாடு
இங்குதான்
பட்டைத் தீட்டப்படுகிறது.....!!!
குடிப்பது
கூழாக இருந்தாலும்
வீடு தேடி வந்தவர்களுக்குப்
பங்கிட்டு கொடுத்துன்னும் பாசமலர்கள்
பூக்கும் பூஞ்சோலை....!!!
வருமானம்
குறைவாக இருந்தாலும்.....
தன்மானம்
அதிகமாக இருக்கும்....!!!
வேலைகள்
அதிகம்
இல்லாமல் இருந்தாலும்....
ஏமாற்றும்
வேலைகள்
இல்லாத இடம்.....
ஏட்டறிவு
அதிகம்
இல்லை என்றாலும்
பட்டறிவுக்கு
பஞ்சமே இருக்காது....!!!
அய்யனார் கோயில் முதல்
அம்மன் கோயில் வரை
நிறைந்து இருக்கும்
புண்ணிய தளங்கள்...!!!
இயற்கை அன்னை
தன் அழகைப் பற்றி
எழுதி வைத்திருக்கும்
கவிதை தொகுப்பு.....!!!
காற்றும்
நீரும்
நிலமும மாசுபடாமல்
இங்கு தான்
அசலாக அப்படியே
வாழ்ந்து கொண்டிருக்கிறது..!!!
கிணற்றில் குதிப்பதும்
வயல்வெளியில் சுற்றுவதும்
குளத்தில் குளிப்பதும்
ஏரியில் மீன் பிடிப்பதும்
பறவைகளோடு வாழ்வதும்
விலங்குகளோடு
நட்புக் கொள்வதும்
காடுமேடெல்லாம்
விளையாடுவதும்
கண்டவர்கள் வீட்டில்
நீர் வாங்கி அருந்துவதும்
கிராமத்தில் மட்டுமே சாத்தியம்..
அந்த சொர்க்கத்திலும்
இப்படி ஒரு
வாழ்க்கை இருக்குமா? என்பது சந்தேகம் தான்.....?
தண்ணீர் குழாய் அடியில்
சண்டை போட்டு
ஆலமரத்தடியில்
பஞ்சாயத்து வைத்தாலும்...
தாத்தா இறந்து விட்டால்
அனைவரும் கட்டிப்பிடித்து
ஒப்பாரி வைப்பதால்
இங்குதான்
சண்டையும் சமாதானமும்
சங்கமம் ஆகின்றது....!!!
இன்று
கிராமங்கள்
தனக்கென்று இருந்த
அடையாளங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
இழந்து வருவது தான்
கவலைப்பட
வேண்டியதாக இருக்கிறது...
அழிந்து வரும் பட்டியலில்
கிராமங்கள்
சேர்ந்து விடுமோ என்ற
அச்சம் எழுகின்றது.....!!!
நம் முன்னோர்கள்
விட்டுச் சென்ற
கிராமங்களை மீட்டெடுப்போம் !கிராமங்களின்
அடையாளங்களை
அழியாமல் பாதுகாப்போம்.!!
*கவிதை ரசிகன் குமரேசன்*
🌳🌴🌳🌴🌳🌴🌳🌴🌳🌴🌳