ஒரு தாயின் இரக்க குணம்

என் அன்னையின் இந்த செயலைக் கண்டு மனம் நெகிழ்ந்ததை எழுதுகிறேன்...

அம்மா❤️!

அரிசி குறைவென காலை உன்குரல் கேட்டெழுந்தேன்,
அன்றுதான் உன் இரக்க குணம் நன்குணர்ந்தேன்,

நீ கூலிக்கு செல்லும் பரபரப்பில்,
குறைவான சோறு உன் பாத்திரத்தில்,
நம் வீட்டு ஆடுகள் அருகில் வர,
அவைகளுக்கு சோறு நீயும் தர,
அதைக் கண்ட காகம் பசியில் கரைய,
அதற்கும் விருந்திட்டு சோறும் குறைய,
அதிலும் மீதியை பூனை கேட்க -நீயோ
தாராளமாய் அள்ளி கொடுக்க!

பிள்ளைக்கு சோறு இல்லையென்று
உன் பசியை மறைத்தாயோ!- அந்த பிராணிகள் பசியாற உன்னை நீ மறந்தாயோ!!
அவைகளுக்கும் ஏக்கம் அம்மா - நீ
                தாயாக கிடைக்க! -மீண்டும்
ஜென்மம் பெற ஆசையம்மா! - உன்
                  மகனாக பிறக்க!!
                     மீண்டும்!
ஜென்மம் பெற ஆசையம்மா! - உன்
                  மகனாக பிறக்க!...

எழுதியவர் : கவிமொழியன் (17-Jul-22, 6:40 pm)
சேர்த்தது : கவிமொழியன்
பார்வை : 1046

மேலே