தவறுகள் அதிகம் செய்

நண்பர்களே தலைப்பை பார்த்த உடன் இவனுக்கு என்ன ஆயிற்று என்று யோசித்து பின்னர் இதனை படிக்க தொடங்கி இருப்பீர்கள் சொன்னது சரியா? இதும் ஒருவகை தவறு தான் இதைப்பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அது சரி நாங்க நினைத்ததில் என்ன தவறு அதற்க்கு பதில் கூறிவிட்டு தொடருங்கள் என்று தாங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. சரி நான் அப்படி சொன்னேன்? என்கிறீர்களா? ஒரு விஷத்தை முழுமையாக தெரியாமல் ஒரு முடிவுக்கு வருவது. அதைத்தான் நான் தவறு என்று சுட்டிக்காட்டினேன். ஏன் தவறு? ஒரு நபரின் எண்ணம், சூழ்நிலை, அவர் சொல்ல வரும் கருத்து என்னவென்று கூட முழுமையாக தெரியாமல் நாம் அந்த நபரை அனுமானித்து அவர் இப்படிப்பட்டவர் அவர் அப்படிப்பட்டவர் என்று judge செய்வது இது மிக பெரிய தவறு. சரி வாருங்கள் மேலும் சில விஷத்தை பார்ப்போம்.

ஏன் அதிகம் தவறுகள் செய்ய வேண்டும்?

என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ஒரு விஷயத்தில் அனுபவம் தேவை என்கிறோம். அனுபவம் இல்லாமல் எது செய்தாலும் அந்த விஷயம் நாம் நினைத்தது போல சரிவர நடக்காது என்பது தான் உலகலாவிய அடிப்படை வாதம் எனவே அதையே நாமும் எடுத்துக்கொள்ளுவோம் ஒரு மனிதனுக்கு அனுபவம் என்பது வருடங்களால் வருவது கிடையாது மாறாக எத்தனை தவறுகள் செய்கிறான் அதில் இருந்து எப்படி பாடம் கற்றுக்கொள்ளுகிறான் அதை எப்படி சரி செய்கிறான் என்பதை பொறுத்து தான் அனுபவம். நான் சொல்ல வருவது புரியும் என்று நம்புகிறேன். இதை தான் உலக புகழ்பெற்ற சீனா தொழில் அதிபரும் அலிபாபா நிறுவனத்தின் தலைவரும் ஆகிய மதிப்பிற்குறிய திரு ஜாக்மா கூறுகிறார்கள். "DO LOTS OF MISTAKES AND LEARN FROM OTHER PEOPLES MISTAKE " என்கின்றார். நீங்கள் தவறுகள் அதிகம் செய்யும் பொழுது நிதானம் வரும் அதே சமயம் புது புது வழிமுறைகளும் கிடைக்கும். ஆம் இன்று உலகத்தை மாற்றியிருக்கின்ற பல கண்டுபிடிப்புகள் பல தவறுகளில் இருந்து தான் பிறந்த்துள்ளது என்பதை நாம் மறக்கவோ மறுக்கவோமாட்டோம் அல்லவா. ஜாக்மா அவர்கள் LEARN FROM OTHER PEOPLES MISTAKE இவ்வாறு கூற காரணம் என்ன? தன்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்கின்றனவன் மனிதன் என்றால் அடுத்தவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்கின்றவன் மாமனிதன் எனலாம்.

வெறும் தவறுகள் அதிகம் செய்தால் போதுமா?

இந்த கேள்வி அநேகமானோர் மனதில் எழுவது சகஜம். இதற்க்கு பதிலாக நான் ஒரு கதையை சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு ஊரில் ஆன்மிக குரு ஒருவர் இருந்தார் அவருக்கு ஒரே ஒரு சிஷ்யன் மட்டுமே இருந்தார். குரு அவர்கள் சிஷ்யனுக்கு ஒரு குடத்தை வழங்கி தினமும் ஆற்றுக்கு சென்று சுத்தமான நீரை தினமும் எடுத்து வர வேண்டும் இது தான் அந்த சிஷ்யனுக்கு குரு அவர்கள் அளித்த பணி. சிஷ்யனும் தினமும் செல்லுவார் அவருக்கு தெரிந்த முறைகளில் முயற்சி செய்வார் ஆனால் அவர் ஆற்றில் இறங்கிய உடன் ஆறு களிமண் என்பதால் கலங்கள் ஆகி தண்ணீர் எடுக்க முடியாமல் போகும் இப்படியே ஒரு சில மாதங்கள் கடந்தன ஒருநாள் சுத்தமான தண்ணீரை கொண்டு வந்துவிட்டார் குரு அவர்கள் எப்படி இது சாத்தியம் ஆயிற்று? அப்பொழுது சிஷ்யன் சொன்னார் குருவே ஒவ்வொரு தடவையும் நான் ஏதாவது தவறு செய்வேன் அதனால் நீர் அசுத்தம் ஆகிவிடும் இப்படி பலமுறை முயற்சி செய்து ஒரு நாள் என் தவறுகளை பட்டியல் செய்து அதனை ஒவ்வொரு நாளும் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக் கொண்டேன் ஒரு நாள் பட்டியலில் இருக்கும் அணைத்து தவறுகளையும் செய்யாமல் தவிர்த்த பொழுது புதிதாய் ஒரு வழி பிறந்தது அதன்ப்படி செய்தேன் உங்கள் முன் சுத்தமான நீருடன் இருக்கிறேன். அதுமட்டுமல்ல குருவே இனி நாம் ஆற்று வரைக்கும் சென்று நீர் எடுக்க தேவையில்லை மாறாக ஒரு குடிநீர் தொட்டி ஒன்றினை ஆற்றிலிருந்து சற்று தூரத்தில் அமைத்துள்ளேன். நான் அழமாக குழியினை தோண்டி ஊற்று ஏற்படும்படி செய்தேன் அதற்க்கு மேலாக வட்ட வடிவ குடிநீர் தொட்டி ஒன்றினை பதித்தேன் அதனுள் நீரை சுத்தம் செய்யும் பொருட்களையும் இட்டுள்ளேன் ஊற்றிலிருந்து வரும் நீரானது சுத்தம் செய்யும் பொருட்களை கடந்து நீர் தொட்டி மேலே வரும் பொழுதே சுத்தமாக வரும் அதனோடு நாம் ஆற்றுக்கு சென்று நீர் எடுக்கும் சிரமமும் குறையும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது ஒருவன் அதிகமான தவறுகள் செய்யும் பொழுது அவனுக்கு அனுபவமும் தன் செய்ய நினைக்க காரியத்தை ஒழுங்கா சரியாக செய்ய முடிகிறது அதுமட்டுமில்லால் தவறுகளை திருத்திக் கொள்ளுவதில் மூலம் காரியத்தை சுலபமாகவும் மற்றும் எளிதாகவும் செய்யக் கூடய வழியும் பிறக்கிறது.

தவறு? தப்பு? என்ன வித்தியாசம்?

தவறுகள் என்பது அறியாமை மற்றும் விளைவினை தெரியாமல் செய்வது. இதனை திருத்திக் கொள்ள இயலும்.

தப்பு என்பது அறிந்தும் மற்றும் விளைவினை தெரிந்தும் செய்வது. இதனை திருத்திக் கொள்ள இயலாது. இதன் விளைவுகளும் மற்றும் பாதிப்பும் பயங்கரமாக இருக்கும்.


தவறுகள் அதிகம் செய் , திருத்திக்கொள், படிப்பினை பெறு, புதிய வழிகளை உருவாக்கு, வெற்றி பெறு.

எழுதியவர் : தமிழ் அன்பு நேசன் (18-Jul-22, 3:38 pm)
சேர்த்தது : Sikkandar
பார்வை : 76

சிறந்த கட்டுரைகள்

மேலே