உண்மைப் பெரியோர் உலக வாழ்க்கையை வெறுப்பர் – அறநெறிச்சாரம் 134

நேரிசை வெண்பா

முடையுடை அங்கணம் நாடோறும் உண்ட
கடைமுறைவாய் போதரக் கண்டுந் - தடுமாற்றில்
சாவாப் பிறவாஇச் சம்பிரத வாழ்க்கைக்கு
மேவாதாம் மெய்கண்டார் நெஞ்சு 134

அறநெறிச்சாரம்

பொருளுரை: அழுகல் நாற்றத்தினை யுடைய சாக்கடையினைப் போன்று தினந்தோறும் சாப்பிட்ட உணவுப் பொருள்கள் இழிவான நிலையில் எருவாய் முதலியவற்றின் வழியாக வெளி வருதலைச் செய்யப் பார்த்திருந்தும், மக்கள் மனமயக்கத்தினாலே செத்தும், பிறந்தும் வாழுகின்ற இம்மாயமான உலக வாழ்க்கையிடத்தே உண்மைப் பொருளையுணர்ந்த பெரியோர்களின் மனம் பொருந்தாததாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jul-22, 1:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே