பைந்தமிழிற் பேசிடுவோம் பாசமொடு பாங்குடனே - கலித்துறை
கலித்துறை
செந்தமிழைக் கற்பதுவும் செந்தமிழிற் பேசுவதும்
..சிக்கலென
முந்திவரும் மோனையுடன் முன்செல்ல ஓர்பொழுதும்
..முட்டுமில்லை!
எந்தமிழை எந்நாளும் ஏற்றமுடன் கற்பதற்கும்
..ஏதமில்லை;
பைந்தமிழிற் பேசிடுவோம் பாசமொடு நெஞ்சுருகிப்
..பாங்குடனே!
- வ.க.கன்னியப்பன்