கிளுவைக் கறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பாலிலா மாத(ர்)கட்குப் பாலுமுண்டாம் போகமுமாந்
தாலமிசை பித்தந் தரிக்குமோ - சாலச்
சிரங்குபுண்கள் எல்லாமே சீழ்வற்றி ஆறும்
அருங்கிளுவை யைத்தின்(று) அறி
- பதார்த்த குண சிந்தாமணி
இதனை உண்டால் பெண்கட்கு தாய்ப்பால் விருத்தியாகும்; வீரிய விருத்தி உண்டாகும்; பித்தம், கிரந்தி, இரணம், நமைக்கிரந்தி, சிலேட்டுமம், வாதம் இவை உண்டாகும் .