சூறைப்பட்சிக் கறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
குஷ்டங் கிருமிகுன்மங் கோரவா தஞ்சோபை
துஷ்டம் பகந்தரநோய் தோன்றுமோ - இஷ்டமுறப்
பத்தியத்திற் காகும் பருகில் உரிசையுமாங்
கைத்திடாச் சூறைக் கறி
- பதார்த்த குண சிந்தாமணி
சுவையான சூறைப்பட்சிகறி குட்டம், புழு, வயிற்றுவலி, கோர வாதம் வீக்கம், ஆறாத புண், பகந்தரம் இவற்றை நீக்கும்; பத்தியத்திற்காகும்