நளினமெல்லியல் நல்லாள் பெண்ணே - விருத்தக் கலித்துறை

விருத்தக் கலித்துறை

நயமா யுரைக்கும் நளினமெல்லியல்
..நல்லாள் பெண்ணே;
தயவா யெனக்குத் தகைசால்பெனத்
..தாவுன் அன்பை!
நயன முரைக்கும் நனிமிகுந்தன
..நல்கும் மாதே;
இயல்பா யுனையே எழில்மனந்தனில்
..ஏற்றேன் நானே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-22, 11:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே