அபயன் என்னும் கடுக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அபயன் எனுங்கடுக்காய் அங்கநோய் எல்லாம்
அபயமிட் டோட அடிக்கும் - அபயற்
கதிக நிறங்கறுப்ப தாகு(ம்)விளை பூமி
பொதிய மலையாம் புகல்

- பதார்த்த குண சிந்தாமணி

கருமைநிற அபயன் கடுக்காய் எலும்பைப் பற்றிய நோய்களை நீக்கும் . இது பொதியமலையில் விளையும் என்பர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jul-22, 10:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே